இதுவரை நடைபெற்ற வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகள்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நான்கு கட்டங்களாக நடைபெற்ற வடமாகாண பெரு விளையாட்டுப் போட்டிகளில், முதலாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இரண்டாம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்திலும், நான்காம் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைபெற்று நேற்றுடன் பெரு விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
தொடர்ந்து இறுதி நிகழ்வான தடகளப் போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
இதுவரையிலும் நடைபெற்று முடிந்த பெரு விளையாட்டுப் போட்டிகளின் அடிப்படையில் 566 புள்ளிகளைப் பெற்று பெரு விளையாட்டுப் போட்டிகளின் சம்பியனாகத் திகழ்கின்றது. தொடர்ந்து 412 புள்ளிகளைப் பெற்ற வலிகாமம் கல்வி வலயம் இரண்டாமிடத்தினையும், 315 பெற்ற வடமராட்சி வலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இதுவரை நடைபெற்ற வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகள்
Reviewed by NEWMANNAR
on
July 02, 2013
Rating:

No comments:
Post a Comment