அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் அமைச்சர் கெஹலியவின் மகனே!- ஸ்ரீலங்கா கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம்பெறும் ரமித் ரம்புக்வெல என்ற வீரரே நடு வானில் பறக்கும் விமானத்தில் கதவை திறக்க முற்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான பிஏ 2158 என்ற விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பிற்பகல் ஐந்து மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீரர் கழிவறை என நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகவும் விமானத்தில் காணப்பட்ட மங்கலான வெளிச்சம் காரணத்தினாலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் குறித்த வீரர் தெரிவித்துள்ளார்.

இந்த அசம்பாவிதத்தையடுத்து பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் ரமித் ரம்புக்வெல மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும் தவறுதலாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த வீரர் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் அமைச்சர் கெஹலியவின் மகனே!- ஸ்ரீலங்கா கிரிக்கெட் Reviewed by Admin on July 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.