அண்மைய செய்திகள்

recent
-

35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கழிவறை என நினைத்து 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிரிக்கட் வீரர் அதிக மது போதையில் இருந்ததாக விமானப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரிக்கட் வீரரின் நடவடிக்கையினால் ஏனைய பயணிகள் பீதியடைந்துள்ளனர். சக வீரர்கள் அவரைத் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு மணித்தியாலங்களகாக குறித்த வீரர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகத் பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடு வானில் விமானக் கதவுகளை இழுத்து திறப்பது சாத்தியமில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தவறுதலாக இவ்வாறு கதவை திறக்க முயற்சித்ததாக குறித்த கிரிக்கட் வீரர் தெரிவித்துள்ளார். கிரிக்கட் வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர் Reviewed by NEWMANNAR on July 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.