மன்னாரில் புனரமைப்பு செய்யப்பட்ட 8 வீதிகள் வைபவ ரீதியாக திறந்து வைப்பு(படங்கள் )
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடமாகாண வீதி இணைப்புத்திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட 8 வீதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-தலைமன்னார் கிராமிய வீதி,கரிசல் வீதி,பேசாலை வாயாடிப்பனை வீதி,ஓலைத்தொடுவாய்வீதி,தோட்டவெளி மாலுப்படி வீதி,எஸ்பலனேட் வீதி,சௌத்பார் வீதி,பள்ளிமுனை கடற்கரை வீதி ஆகிய வீதிகலே புனரமைப்பு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த வீதிகளை கைத்தொழில் மற்றும் வாணி அலுவல்கள் அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி,உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
-இதன் போது அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் உற்பட பலர் கலந்து கொண்டனா.
மன்னார் நிருபர்-
(03-07-2013)
மன்னாரில் புனரமைப்பு செய்யப்பட்ட 8 வீதிகள் வைபவ ரீதியாக திறந்து வைப்பு(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
July 03, 2013
Rating:
No comments:
Post a Comment