அண்மைய செய்திகள்

recent
-

16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன்

16 பாரிய மனித உரிமை மீறல் வன்முறை தொடர்பில் விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்து மனுவொன்றை அனுப்பியுள்ளார்.

திருகோணமலையில், 2006 ஆம் ஆண்டு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் ஒருவரான ராஜிஹர் மனோகரனின் தந்தையான மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இந்த அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த பிறகு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த மருத்துவர் மனோகரன் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது.

தனது மகனது கொலையாளிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மனோகரன், என்ன நடந்து என்ற உண்மையை வெளிப்படுத்த போவதாக கூறியுள்ளார்.

மனோகரன் தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என அவர் போராடி வருகிறார்.

அதேவேளை 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 12 பொலிஸ் அதிரடிப்படையினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் உட்பட 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசாங்கம் சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும் எனவும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் என மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தன.
16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.