அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞன் அனுராதபுரத்தில் கடத்தல்-தப்பி வந்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மன்னார் கூறாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியின் காரணமாக நேற்று திங்கட்கிழமை அனுராதபுரம் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவர்களுடைய உறவினர்கள் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் குறித்த இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை குறித்த குழுவினரிடம் இருந்து தப்பி வந்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அவருடைய சகோதரன் தெரிவித்தார்.

குறித்த இளைஞன் கடத்தப்பட்டமை தொடர்பாக அவருடைய சகோதரர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் கூறாய் பகுதியைச் சேர்ந்த எனது சகோதரரான  நாகலிங்கம் ரஜீவன்(வயது-21)என்பவர் அனுமதிப்பத்திரத்தோடு ஆற்று மண் ஏற்றி விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில்  தென்பகுதி அமைச்சர் ஒருவரின் செல்வாக்குடன் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கு கூறாய் கிராமத்தில் மணல் மண் அள்ளுவதற்கான அனுமதியை வழங்கியிருந்தனர்.

குறித்த சிங்களவர் பலரை வைத்து கூறாய் கிராமத்தில் மண் ஏற்றி வந்தார்.
இந்த நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும், தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவரும் தொடர்ச்சியாக மணல் மண் ஏற்றி வந்துள்ளனர்.

மாதம் ஒன்றிற்கு 200 லோட் மண் மட்டுமே ஏற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த சிங்களவர் படைத்தரப்பினரது ஆதரவுடன் மாதம் ஒன்றிற்கு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட லோட் மண் அள்ளி வந்துள்ளார்.

இதனால் குறித்த இளைஞருக்கும்,சிங்களவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில்   மண் அகழ்விற்கான பாஸ் முடிவடைந்த நிலையில் அதனை புதிப்பிப்பதற்காக நேற்று திங்கட்கிழமை குறித்த இளைஞரும்,அவருடைய நண்பரும் அனுராதபுரம் அலுவலகத்திற்கு பாஸ் புதிப்பிப்பதற்குச் சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த அலுவலகத்திற்கு சுமார் 22 பேர் கொண்ட குழுவினர் சென்று  நாகலிங்கம் ரஜீவன் என்பவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கூடச்சென்ற இளைஞர் கூறாயில் உள்ள அவருடைய வீட்டிற்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஆத்திரமடைந்த கூறாய் கிராம மக்கள் குறித்த தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவனுடன் வேளை செய்கின்ற 5 சிங்கள பணியாளர்களை நேற்று திங்கட்கிழமை மாலை பிடித்து கட்டி குறித்த இளைஞரின் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

எனினும் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த வீட்டிற்குச் சென்று குறித்த 5 பேரையும் மீட்டு விடுவித்துள்ளனர்.

ஆனால் கடத்தப்பட்ட இளைஞரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை என அவரது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-இந்த நிலையில் கடத்தப்பட்ட இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருடைய சகோதரனுக்கு தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தி தன்னை கடத்திச் சென்றதாகவும் பின் கை,கால்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் அருகில் உள்ள குளத்திற்கு அருகில் கொண்டு சென்றதாகவும்,பின் சிங்கள மொழியில் அவர்கள் உரையாடியதாகவும்,அதில் என்னை உயிரோடு விட்டால் பிரச்சினை என்றும் கொலை செய்து விடுவோம் என அவர்கள் கதைத்ததை கேட்டதாகவும் பின் தான் தப்பிக்க முயற்சி செய்து தப்பி வேறு இடத்தில் வந்து நிற்பதாகவும் குறித்த இளைஞர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை குறித்த இளைஞர் மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனக்கு நடந்தவற்றை கூறி முறைப்பாடு செய்துள்ளதாக கடத்தப்பட்ட இளைஞரின் சகோதரன் மேலும் தெரிவித்தார்.


மன்னார் இளைஞன் அனுராதபுரத்தில் கடத்தல்-தப்பி வந்து இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு Reviewed by Admin on August 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.