அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மக்களின் விடிவை தீர்மானிக்கப்போவது மக்களின் தெரிவிலேயே தங்கியுள்ளது. ஜ.ம.சு.கூ.மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன்.

மத்திய அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு எக்கட்சியாலும் எதையும் சாதித்துவிட முடியாது. மன்னார் மாவட்டத்தை முழுமையாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் அரசாங்கக்தை முழுமையாகப்பலப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

-இது தொடர்பாக அவர்   வெளியிட்டுள்ள அறிக்கையில்  மேலும் குறிப்பிடுகையில்,,,

   மன்னார் மாவட்ட மக்களின் விடிவை தீர்மானிக்கப்போவது மக்களின் தெரிவிலேயே தங்கியுள்ளது.

 இது சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் . சுமார் 30 வருடங்களாக நாம் பல்வேறு கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்துள்ளோம்.

 இதுவரை காலமும் யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். மன்னார் மாவட்டமும் ஏனைய மாவட்டங்களைப்போன்று அபிவிருத்தி அடைய வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நமது மாவட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இன மத வேறுபாடுகளை மறந்து இப்பகுதியை முழுமையாக கட்டியெழுப்ப நாம் அனைவரும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  

எனது சகோதரரான அமைச்சர் றிஸாத் பதியதீன் தலைமையின் கீழ் மன்னார் மாவட்டம் மறு மலர்ச்சி பெற்று வருகின்றது .அமைச்சரின் மக்கள் பணியில் இனம் மதம் பாராது சேவையாற்றி வருகின்றார்.

 நான் அவரின் சேவையில் தோளோடு தோள் நின்று மன்னார் மாவட்டத்திற்கு சேவையாற்றி வருகின்றேன்.

எனது மக்கள் சேவை பணியை மேன்மேலும் தொடர்வதற்கு உங்களின் ஆதரவினை கேட்டு நிற்கின்றேன். இன்று மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக கிடைத்துள்ளது.

நாங்கள் இனம்,மதம் பாராது மக்களுக்கு தொடர்ந்தும் சேவை செய்து வருகின்றோம்.

மாகாண சபை என்பது அபிவிருத்தியை நோக்கமாக கொண்டதாகும். எமது பலம் மத்திய அரசாங்கத்திலும் உள்ளது. இதனால் மன்னார் மாவட்ட அபிவிருத்தி இலக்கினை மிக இலகுவாக அடைந்துகொள்ள முடியும்.

மக்களின் எதிர்கால தேவையினை எங்களினால் முழுமையாக பூர்தத்தி செய்ய முடியும்.என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்ட மக்களின் விடிவை தீர்மானிக்கப்போவது மக்களின் தெரிவிலேயே தங்கியுள்ளது. ஜ.ம.சு.கூ.மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிப்கான் பதியுதீன். Reviewed by Admin on August 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.