வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை
மேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்
. உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார்.
தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.
வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:

No comments:
Post a Comment