யாழ்.நாவற்குழி சிங்கள கிராமப் பகுதியிலுள்ள புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு
குறித்த பகுதியில் 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த சிங்கள மக்கள் தங்கியிருக்கும் நிலையில் அவர்களின் வழிபாட்டுக்கென பிரஜாசால வணக்க இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 8மணியளவில் அப்பகுதியில் வெள்ளி நிறத்தினாலன வாகனம் ஒன்று நடமாடியதாகவும், அதன் பின்னரான சில நிமிடங்களில் பிரஜாசால கூரை மீது பெரிய சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ள மக்கள் அந்தச் சத்தம் கேட்டதன் பின்னரான சில நிமிடங்களில் பாரிய சத்தத்துடன் வெடிப்புச் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நிலம் மற்றும் பிரஜாசால கட்டிடத்தின் சுவர்களில் சன்னங்களின் காயம் பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சிங்கள மக்கள் மற்றும் பெருமளவு விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் என குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தின்போது பிரஜாசால உள்ளே சிங்கள மக்கள் சிலர் இருந்தபோதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
யாழ்.நாவற்குழி சிங்கள கிராமப் பகுதியிலுள்ள புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:
No comments:
Post a Comment