அண்மைய செய்திகள்

recent
-

மதங்கள் இழிவுபடுத்தப்படுவதைத் தடுக்க புதிய சட்டம்

நாட்டிலுலுள்ள பிரதான மதங்கள் இழிவுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

 அச்சு ஊடகங்களிலும் இணையத்தின் ஊடாகவும் பிரதான மதங்களின் மதக் கொள்கைகள், கோட்பாடுகளை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது போதனைகள், மதத்தின் மரபுகளை அவமானப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட தடை விதிக்கப்பட உள்ளது.

 முதல் கட்டமாக பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் வரைவுச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தையோ அதன் கொள்கைகள் கோட்பாடுகளையோ இழிவு படுத்தக் கூடிய அச்சு மற்றும் இணைப் பிரசுரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 உத்தேச வரைவுச் சட்டம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



மதங்கள் இழிவுபடுத்தப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.