வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைகளுக்கு 2014 இறுதிக்குள் தீர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளுகுனாவ மற்றும் கெவிலியா மடு பிரதேசங்களில் நிலவி வரும் காணிப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான காணிக் சச்சேரி நடமாடும் சேவையொன்று நேற்று வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது அதை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய காணி ஆணையாளர் நாயகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான காணிப் பிரச்சினைகள் உள்ளன. இவற்றை அடுத்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள் நாங்கள் தீர்த்து வைப்போம்.
இந்த பிரதேசங்களில் யுத்தம் நிலவியதால் இந்த காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாமல் இருந்தன. இவ்வளவு நீண்ட காலமாக உள்ள காணிப்பிரச்சினைகளை ஓரிரு மாதங்களுக்குள் தீக்த்து வைக்க முடியாது.
தற்போது வட மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினைகளை நாங்கள் படிப்படியாக தீர்த்து வைத்து வருகின்றோம். இனி கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம். அதற்கான நிதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டையும், அடுத்த ஆண்டையும் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆண்டாக நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் காணிக் கச்சேரி நடமாடும் சேவைகளை நடத்தி அங்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அங்கு பிரதேச செயலாளரினால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகளை நாம் தீக்த்து வைப்போம். இந்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளுகுனாவ மற்றும் கெவிலியா மடு காணிப்பிரச்சினைகளில் முதலில் புளுகுனாவ பிரதேசத்திலுள்ள காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்த பின்னர் கெவிலியா மடு காணிப்பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.
புதிதாக அரச காணிகளில் அத்துமீறி குடியேறுகின்றவர்கள், அரச காணிகளை பிடிப்பவர்கள் அவற்றிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். குடியிருப்பதற்கு காணியில்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்தால் அது தொடர்பில் காணிக் கச்சேரியில் பரீசிலிக்கப்படும்.
இங்குள்ள பழைய காணிப் பிரச்சினைகளை தீக்த்து வைக்க வேண்டும். அதன் பின்னரே புதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த காணிப் பிரச்சினைகளை அரசியலாக்கி மேலும் இந்த பிரச்சினைகளை விஸ்தரிக்க வேண்டாம். இதற்காக ஆர்ப்பாட்டங்களை நடாத்தி இந்த பிரச்சினைகளை பெரிதாக்கிக்கொள்ள வேண்டும்.
தமிழர்கள், சிங்களவர்கள் என்று இனம், மதம், மொழி பார்த்து வேலை செய்வதில்லை. சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு காணிச் சட்டத்திற்குபட்ட வகையில் இந்த காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம்.
இந்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளுகுனாவ காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக இந்த பிரதேச மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். இதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு காணிப் பிரச்சினைகளுக்கு 2014 இறுதிக்குள் தீர்வு
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment