மன்னாரில் வர்த்தக நெறியாளர் செயல்திட்ட கருத்தரங்கு.
YBSL இன் அண்மைய ஆய்வின் படி அநேகமான இளம் முயற்சியாளர்கள் தங்களது தொழில் துறையினை மேம்படுத்த ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவையினை எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிணங்க இளம் முயற்சியாளர்களை நெறிபடுத்தக்கூடிய அனுபவமிக்க, ஆர்வமுடைய வர்த்தகர்கள் மற்றும் புத்திஜீவிகளை நெறியாளர்களாக பயிற்றுவித்து அவர்களை நெறியாளர் வலைப்பின்னலில் இணைத்து அதனூடாக முயற்சியாளர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டலினை வழங்குவதே இச் செயற் திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கான கருத்தமர்வு அண்மையில் மன்னார் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இணைப்பாளர் திரு. ராஜேஸ் அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை நெறிப்படுத்தினர்.
மன்னாரில் வர்த்தக நெறியாளர் செயல்திட்ட கருத்தரங்கு.
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:
No comments:
Post a Comment