மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு.
இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கடந்த வருட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும்,இவ்வருடம் இடம் பெற்று வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக இளைஞர்களையும்,இளைஞர் கழகங்களையும் மையப்படுத்தி இடம் பெற்று வரும் வேலைத்திட்டம்,இளைஞர் கழகங்களின் அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டது.
அதுமட்டுமின்றி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற இலவச தொழில் பயிற்சி நெறிகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எஸ்.ரவிக்குமார்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்குப்பதிவாளர் ஐ.சி.ஏ.ஜோன் பொஸ்கோ,இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா,மன்னார் நகர இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியுக்குரூஸ்,நானாட்டன் உதவி இளைஞர் சேவை அதிகாரி எம்.சைமன் சில்வா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு.
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:
No comments:
Post a Comment