அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரிய நியமனம்

கிழக்கு மாகாணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு (விழிப்புலனற்றோர்) முதற் தடவையாக ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது என மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் எழு பேருக்கே இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இவர்களுக்கான நியமனம் கிழக்கு மாகாண கல்வி திணைக்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

இவர்கள் தமிழ், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பர். வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே இவர்கள் ஆசரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

"இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு என விசேட திட்டமொன்று மாகாண கல்வி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் ஆசிரிய செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அவதானிக்கப்படும்" என மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம் தெரிவித்தார்.

ஆசிரிய நியமனத்தில் குறித்த சதவீதமொன்று மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரமவினால் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன.

இந்த நிகழவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எ.ஏ.புஸ்பகுமார, மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரிய நியமனம் Reviewed by Admin on August 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.