அண்மைய செய்திகள்

recent
-

மூதூர் 17 பணியாளர் கொலை தொடர்பில் இலங்கையிடம் உண்மையான விசாரணை இல்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

திருகோணமலை மூதூரில் கொலை செய்யப்பட்ட 17 தன்னார்வ பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றக்கரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க்கை தலைமையமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று தமிழர்களாகிய 17 பேர் மூதூர் எக்சன் பெய்ம் நிறுவன அலுவலக சூழலில் வைத்து கொல்லப்பட்டனர். இதில் 4 பெண்களும் அடங்கியிருந்தனர்.

விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னரே இந்த கொலைகள் இடம்பெற்றிருந்தன

இந்தநிலையில் சர்வதேசத்துக்கு ராஜபக்ச அரசாங்கம் நல்ல எலும்புத்துண்டுகளை வீசியுள்ள போதிலும் குறித்த மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படப்படவில்லை என்று கண்காணிப்பகத்தின் கொள்கை பண்pப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே தமது உறவுகளை இழந்தவர்கள் இன்னும் நீதிக்காக ஏங்கி நிற்பதாக ஜேஸ்ம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலைகள் தொடர்பில் அரசாங்க படையினர்மீது குற்றச்சாட்டுக்களை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ளனர்.

இந்தநிலையில் ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை மற்றும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆகியவற்றை கருத்திற்கொண்டு விசாரணை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது.

இது உண்மையான முன்னெடுப்பாக இருக்காது.

எனவே இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்காக சர்வதேசமே செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூதூர் 17 பணியாளர் கொலை தொடர்பில் இலங்கையிடம் உண்மையான விசாரணை இல்லை: மனித உரிமைகள் கண்காணிப்பகம் Reviewed by Admin on August 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.