அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்று காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படும் இரு மீனவர்கள் தொடர்பில் திடுக்கிடும் உண்மைத் தகவல்கள்.

மன்னார் பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்று காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படும் இரு மீனவர்கள் தொடர்பில் திடுக்கிடும் உண்மைத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

மன்னார் பேசாலையைச் சேர்ந்த மீனவரான எம்.ஜோசப் டியூரன் அப்புசாமி(வயது-26) மற்றும் கட்டாஸ்பத்திரியை சேர்ந்த மீனவரான கமால்டீன் சாமீன் (வயது-26) ஆகிய இரண்டு மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி கண்ணாடி இழைப்படகு ஒன்றில் வவுனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை ஏற்றிக்கொண்டு இந்தியாவிற்கு செல்ல எத்தணித்துள்ளனர்.

குறித்த குடும்பம் விமானம் மூலம் இந்தியா செல்ல முடியாததன் காரணத்தினால் பெருந்தொகை பணத்தை கொடுத்து படகு மூலம் இந்தியா செல்ல எத்தனித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி குடுத்த குடும்பம் மன்னார் வருகை தந்த நிலையில் மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து குறித்த மீனவர்களின் கண்ணாடி இழைப்படகின் மூலம் இந்தியாவிற்கு பயணத்தை ஆரம்பித்தள்ளனர்.

இதன் போது குறித்த மீனவர்கள் கடற்படையினருக்கு பணத்தை கொடுத்து எவ்வித தடங்கலும் ஏற்படாதவாறு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது குறித்த 2 மீனவர்கள் உற்பட ஆண்கள்,பெண்கள்,சிறுவர்,யுவதிகள் என 7 பேர் பயணித்துள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் படகு பேசாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு சில மணி நேரங்களில் கடற்படையினரின் படகு குறித்த மீனவர்களின் படகை துரத்தி வருவதை கண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மீனவர்கள் தமது படகை அதி வேகத்துடன் ஒட்டிச் சென்ற நிலையில் நடுக்கடலில் விபத்து ஏற்பட்டு படகு மூழ்கியதாக கூறப்படுகின்றது.

எனினும் கடற்படை அவர்களை காப்பற்றுவதற்கு எத்தணிக்கவில்லை என அறிய முடிகின்றது.

தற்போது இலங்கை கடற்பரப்பில் சடலங்கள் கரை ஒதுங்கி வருகின்றது.இதில் படகோட்டிகளான மீனவர்கள்,பெண்,ஆண்களுடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் பயணித்ததாக கூறப்படும் இரண்டு இளம் யுவதிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. இக்குடும்பம் வவுனியா எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.



மன்னார் பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்று காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படும் இரு மீனவர்கள் தொடர்பில் திடுக்கிடும் உண்மைத் தகவல்கள். Reviewed by Admin on August 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.