அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காயாக்குழி கிராமத்தில் ”புனித தெரேசா முன்பள்ளி”திறந்து வைக்கப்பட்டது

அமரர் ச.சுரேந்திரன் நினைவாக ‘புனித தெரேசா முன்பள்ளி’மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட காயாக்குழி கிராமத்தில் ரி.ஆர்.ரி வானொலியின் ஒழுங்குபடுத்தலில் பத்துஇலட்சம் ரூபா நிதி செலவில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் அடிப்படைவசதிகள் அற்ற நிலையில் காயாக்குழிக்கிராம மக்கள் வாழ்ந்துவருகின்றனர். குறித்த கிராமத்தில் உள்ள சிறார்களுக்கு ஆரம்பக்கல்வியைத் தொடர்வதற்கான அடிப்படைவசதிகள் உடைய முன்பள்ளி எதுவும் இல்லாத நிலையே காணப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த கிராமத்தில் முன்பள்ளி ஒன்றினை அமைப்பதற்கான கோரிக்கை குறித்த கிராம மக்களால் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புலத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பத்துப்பேர் இணைந்து குறித்த கிராமத்தில் முன்பள்ளி அமைப்பதற்காக முன்வந்தனர். இதன் அடிப்படையில் ரி.ஆர்.ரி வானொலியின் ஒழுங்படுத்தலில் முன்பள்ளிக்கான நிரந்தரக்கட்டடம் அமைக்கப்பட்டு நேற்றைய நாள் அமரர் சுரேன் நினைவாக ‘புனித தெரேசா’ முன்பள்ளி திறந்துவைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சீருடைகள் என்பனவும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சிலாவத்துறை பங்குத்தந்தை இராஜநாயகம், உதவிப்பங்குத்தந்தை நியுட்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், மருத்துவர் குணசீலன் உட்பட்டவர்களும் கிராம மக்களும் பங்குகொண்டிருந்தனர்.

பத்துஇலட்சம் ரூபாவுக்கும் அதிகமான செலவில் முன்பள்ளி அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளமை குறித்து கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி வெளியிட்டதுடன் இதற்கான உதவிகளை வழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்திருக்கின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு எந்தவித உதவிகளையும் வழங்குவதில்லை என்று அரச தரப்பு குற்றம்சாட்டிவருகின்றமை பொய் என்பதை இவ்வாறான சம்பவங்கள் வெளிப்படுத்துவதாக அங்கு வந்திருந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த கிராமத்தினைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் இருதய சிகிச்சைக்காகவும் ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் நிதி உதவி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










மன்னார் காயாக்குழி கிராமத்தில் ”புனித தெரேசா முன்பள்ளி”திறந்து வைக்கப்பட்டது Reviewed by Admin on August 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.