அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் உலக மனிதாபிமான தினத்தினை குறிக்கும் முகமாக சித்தவைத்திய இலவச முகாம்-படங்கள்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் மாவட்டக்கிளையினால் இலவச சித்த வைத்திய முகாம் ஒன்று, அல்பிரட் குலாஸ் கொம்பிலக்ஸ், முதலாவது மாடி, யூனியன் வீதி பேசாலை என்ற முகவரியில் அமைந்துள்ள மன்னார் பிரிவு அலுவலகத்தில் பேசாலை அலகுத் தலைவர் திரு எஸ். ஜெ. சீலன் குலாஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிகழ்விற்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் செலலக்கண்டு லோகநாதன் அவர்களும், பேசாலை அலகுத் தலைவர் திரு எஸ் ஜெ சீலன் குலாஸ், தொண்டர்கள் மற்றும் அலகின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். மு.ப 9 மணி தொடக்கம் பி.ப 5 மணி வரையில் டாக்டர் செலலக்கண்டு லோகநாதன் அவர்களினால் நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமினால் மொத்தமாக 186 பயனாளிகள் தோல், சளி, மூட்டுவாதம் போன்ற நோய்களுக்கான சிகிச்சையுடன் மருத்துவ ஆலோசனையும் பெற்று பயனடைந்தனர்.

 மருத்துவ முகாம் ஆரம்பமாவதற்கு முன்நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் செலலக்கண்டு லோகநாதன் அவர்கள் 'உலக மனிதாபிமான தினமானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட 19ம் திகதி கொண்டாடப்படுவதாகவும், இன்றய காலகட்டத்திலே மக்கள் கணனி மற்றும் தெலைபேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கு அடிமையாகியுளமையினால் மனிதன் மனிதனாக மதிக்கப்படுகின்ற தன்மை இல்லாதிருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் வயது முதிந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் குறிப்பாக நோயுற்றவர்களுடன் கூட தமது நேரங்களை செலவளிப்பதில்லை என்பதனையும் தெரிவித்ததுடன் இந்த இலவச மருத்துவ முகாமினூடாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மனிதர்களை கௌரவிக்க மற்றும் முதன்மைப்படுத்த உலக மனிதாபிமான தினத்தினை குறித்து நிற்கின்றது' என்பதனையும் தெளிவு படுத்தினார்.

மேலும் இந்த மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்து நல்கிய மன்னார் கிளையின் தலைவர் திரு. ஜே.ஜே கெனடி மற்றும் செயலாளர் திரு ரகுசங்கர் ஆகியோருக்கு பேசாலை அலகுத் தலைவர் திரு எஸ். ஜெ. சீலன் குலாஸ் அவர்க நன்றியினை தெரிவித்தார்.












இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் உலக மனிதாபிமான தினத்தினை குறிக்கும் முகமாக சித்தவைத்திய இலவச முகாம்-படங்கள் Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.