ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளில் நம்பிக்கையில்லை; சர்வதேச மன்னிப்புச் சபை
குறித்த விடயம் தொடர்பில் மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதி மொழிகளை தொடர்ச்சியாக மீறி வருகிறது. அதன்படி இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியா கேள்வியெழுப்புவதுடன் அங்குள்ள மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் கட்டாயமாக தலையீடு செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவரிடம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்ப வேண்டும். அத்துடன் யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இதுவரை இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தினால் மறைக்கப்படுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்படுகின்ற இலங்கை மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில், இந்தியா உறுதியாக இருக்க வேண்டும்.
இதேவேளை, யுத்தத்தின் போதும், யுத்த நிறைவின் பின்னரும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். எனினும் அந்த ஆணைக்குழு விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகளில் நம்பிக்கையில்லை; சர்வதேச மன்னிப்புச் சபை  
 Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment