மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் என்பவருக்கு கொலை மிரட்டல்.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் லெம்பேட் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.07 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த அவர்களிடம் தொலைபேசியூடாக முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த தினமன்று மாலை 6 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் வந்த 3 நபர்கள் தன்னை வழிமறித்து அருகில் உள்ள கோந்தைப்பிட்டி மீனவர் வாடிக்கு குறித்த பிக்கப் வாகனத்தில் ஏற்றிச் சென்று விசாரித்ததகாவும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு ஆதரவாக இந்த தேர்தலில் செயற்பட வேண்டாம் எனவும்,தேர்தல் முடியும் வரை சற்று ஒதுங்கி நிற்குமாறும் தன்னை எச்சரித்துள்ளதாகவும் குறித்த குழு தன்னை கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக அவர் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் என்பவருக்கு  கொலை மிரட்டல்.
 Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
August 19, 2013
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment