அண்மைய செய்திகள்

recent
-

பூநகரியில் பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச செய­ல­கப்­ பி­ரிவில் வினா­சி­யோடை கிரா­மத்தில் மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் பலாத்­கா­ரத்­திற்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

38 வயதுடைய இந்தப் பெண் மீது சீருடை அணிந்த இருவரே பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளனர். தனது குடும்ப வருமானத்திற்காக பனையோலையில் பொருட்கள் செய்து விற்கும் இந்தநப் பெண் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வழமைபோன்று பனை ஓலை எடுப்பதற்காக சென்றவேளையில் சீருடை அணிந்த இருவர் தமது முகங்களை துணியால் மறைத்துக்கட்டியிருந்த நிலையில் பெண் மீது பலாத்காரம் புரிந்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து கடும் இரத்தப் போக்குடன் பூநகரி வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்ட இப் பெண் இரத்தப் போக்கு கட்டுப்படாத நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பூநகரியில் பெண்மீது பாலியல் பலாத்காரம் : ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Admin on August 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.