முசலிக்கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் கிடைக்குமா?
மீள்குடியேற்றக்கிராமமான முசலியின் மக்கள் பொதுக்கட்டிடம் எதுவுமின்றி பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.இக்கிராமத்தில் பள்ளிவாயல்,பாடசாலை தவிர்ந்த எந்தவொரு பொதுக்கட்டிடமும் இல்லை.பொதுக்கூட்டங்களுக்காகவும்,பொதுத்தேவைகளுக்காகவும் பள்ளிவாயல்,பாடசாலைகளைப்பயன்படுத்த முடியாத ஒரு யதார்த்த நிலைமையுள்ளது.

1.கிராமமுன்னேற்றச் சங்கச்செயற்பாடுகள்
2.சனசமுக நிலையச்செயற்பாடுகள்
3.நூலகச்செயற்பாடுகள்
4.குடும்பநல சுகாதார மாதுவின் செயற்பாடுகள்
5.கிராம அதிகாரியின் செயற்பாடுகள்
6.ஒன்றுகூடல் மண்டபச்செயற்பாடுகள்
7.முன்பள்ளிப்பாடசாலைச் செயற்பாடுகள்
8.சிவில் பாதுகாப்புச்செயற்பாடுகள்
சிறப்பான முறையில் ஒரு பல்தேவைக்கட்டிடத்தை அமைத்துக்கொடுத்தால் கீழ்ச்சொல்லப்பட்ட செயற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெறும் .இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ,முசலிப்பிரதேச சபைத்தவிசாளர் எஹியான் அப்துல் வஹாப் போன்றோர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முசலிக்கிராம மக்கள் கோரிக்கைவிடுகின்றனர்.
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிக்கிராமத்திற்கு பல்தேவைக்கட்டிடம் கிடைக்குமா?
Reviewed by Admin
on
August 15, 2013
Rating:

No comments:
Post a Comment