அண்மைய செய்திகள்

recent
-

மடு அன்னையின் ஆவணித்திருவிழா (படங்கள்

 மன்னார் மடு திருத்தளத்தின் ஆவணித்திருவிழா இன்றுவியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம் பெற்றது. 

மடு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் காலை 6.30 மணிக்கு இடம் பெற்றது. 

இதில் திருத்தந்தையின் இலங்கைக்காண பிரதிநிதி மேதகு ஜோசப் ஸ்பிற்ரேரி ஆண்டகையின் முதல்மையில,; கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் இளைப்பாறிய பேராயர் ஓஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகையும்,யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையும்,கண்டி மறைமாவட்ட ஆயர் மேதகு வியான்னி பெணான்டோ ஆண்டகையும்,அனுராதபுர மறைமாவட்ட ஆயர் மேதகு நோபட் அன்றாடி ஆண்டகையும் நுற்றிற்கும் மேற்பட்ட குருக்களும் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். 

இதனைத்தொடர்ந்து மடு அண்ணையின் திருச்சுரூப பவனியும் இடம் பெற்றது. -இதன் போது சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமாண பக்தர்கள் கலந்து கொண்டு மடு அண்ணையின் ஆசிரைப்பெற்றனர்.
--மன்னார் நிருபர்- (15-08-2013)
மடு அன்னையின் ஆவணித்திருவிழா (படங்கள் Reviewed by NEWMANNAR on August 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.