மன்னார் மாவட்டத்தில் 2 முஸ்லிம் பாடசாலைகள்தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளன
மன்னார் மாவட்டத்தில் இரு முஸ்லிம் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக பாடசாலை நிர்வாகத்திடம் விரைவில் கல்வி அமைச்சினால் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் கடந்த ஜுலை மாதம் 29ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் வட மாகாணத்தில் நான்கு தமிழ் பாடசாலைகள், 2 முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் ஒரு சிஙகளப் பாடசாலை உட்பட 7 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை முசலி மத்திய மகா வித்தியாலயமும், மன்னார் அல்-அஷ்ஹர் மகா வித்தியாலயமும் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இரு பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் வைபவம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாகவும் இதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்பாடசாலைகளை பாடசாலை நிர்வாகத்திடம் தேசிய பாடசாலைகளாகக் கையளிக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் தாஜுடீன் மேலும் குறிப்பிட்டார்
இதேவேளை, நாடு பூராகவும், உள்ள ஏறக்குறை 9600 பாடசாலைகளில் 343 தேசிய பாடசாலைகள் உள்ளன.

Reviewed by NEWMANNAR
on
August 21, 2013
Rating:

No comments:
Post a Comment