மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தீர்வுக்காக போராடுவோம்! மாகாணசபை உறுப்பினர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு யாழ். "ரில்கோ' விடுதியில் நேற்று மாலை நடந்தது. இந்தச் சந்திப்பில் உரையாற்றும் போது சம்பந்தன் இந்த அழைப்பை விடுத்தார். தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எங்களுக்குப் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.
தமிழ் மக்கள் எங்களை நம்புகின்றார்கள். நாங்கள் அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும். எங்கள் மக்களின் இறுதித் தீர்வுக்காக விட்டுக் கொடுக்காமல் போராடுகின்ற அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் நாம் கடினமாக உழைப்போம் என்றும் சம்பந்தன் கூறினார்.
தமிழ் மக்களின் விடிவுக்காக எமது உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். அதற்காக அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.
மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தீர்வுக்காக போராடுவோம்! மாகாணசபை உறுப்பினர்களுக்கு சம்பந்தன் அழைப்பு
Reviewed by Admin
on
September 24, 2013
Rating:

No comments:
Post a Comment