அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்ப நடவடிக்கை

அடுத்த வருட முற் பகுதியில் நடைபெறவுள்ள இந்திய - இலங்கை ஆணைக்குழுவின் கூட்டத்தில் 100,000 இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்புவது பற்றி ஆராயப்படும் என அதிகாரிகள் தெரிவித்தன.

யுத்த காலத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அடைக்கலம் கோரி தமிழ் நாட்டுக்கு சென்றனர். இவர்களில் 68,058 இலங்கை அகதிகள் 110 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் 34,471 அகதிகள் இந்தியாவில் தமக்கு தெரிந்த குடும்பங்களுடன் தங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 5,628 அகதிகள் தாமாக இலங்கை திரும்பியதாகவும் இதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை உதவியளித்ததாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்தார்.

மேலும் 2,400 பேர் இலங்கைக்கு திரும்பி வர சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வருட ஜனவரியில் முதற் தடவையாக கூடிய இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழு அதன் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புதலையும் சேர்த்திருந்தது.

திரும்பி வருவோருக்கு இலவச விமானச் சீட்டுக்கள், 25,000 ரூபா உதவி தொகை ஆகியன ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவை உதவியுடன் வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


இலங்கை அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்ப நடவடிக்கை Reviewed by Admin on September 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.