அண்மைய செய்திகள்

recent
-

இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்து கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளைப் பெற்றுக் கொடுத்த இந்திய ALVITA PHARMA (PVT) LTD நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யும் சகல மருந்துகளின் கொள்வனவுகளையும் இடை நிறுத்த மருத்துவ தொழில்நுட்ப விநியோகப் பிரிவு தீர்மானித்துள்ளது.

 ஏதாவதொரு நிறுவனம் பல தடவைகளில் இவ்வாறு தவறிழைத்தால் அது அமைச்சின் கீர்த்திக்கு மாசு கற்பிக்குமென அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.இத்தகைய தவறிழைக்கும் நிறுவனங்களை ஒதுக்கி வைக்குமாறும், உற்பத்திகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் தொடர்ந்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்த சில மருந்து தொகுதிகள் தரமற்றவை என உறுதியானது.இவற்றை உடனடியாக பாவனையிலிருந்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 எவ்வாறாயினும், நாட்டுக்குள் கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வதற்காக சகல கட்டங்களிலும், கவனமாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் மருத்துவ தொழில்நுட்ப விநியோகப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.





இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்து கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் Reviewed by Admin on September 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.