அண்மைய செய்திகள்

recent
-

அதிபர், ஆசிரியர்கள் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன்.

அதிபர் , ஆசிரியர்கள் தேர்தலில் சுதந்திரமாகச் செயற்பட்டு வாக்களித்தமைக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்
சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா . புவனேஸ்வரன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , `` நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் பெரும்பாலான அதிபர்கள் , ஆசிரியர்கள் வாக்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது . நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று வாக்களித்தமைக்காக முதலில் நன்றி கூறுகின்றேன் .

அதிபர்கள் , ஆசிரியர்கள் சுதந்திரமாக அச்சமின்றி தொழிற்பட்டு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தியிருப்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் .


அத்தோடு , மக்களுக்கான சரியான வழிகாட்டலையும் வழங்கி தேர்தல் தொடர்பான விழிப்பினையும் ஏற்படுத்தி வழமைக்கு மாறாக பெரும் எண்ணிக்கையானோரை வாக்களிக்கச் செய்தமை பாராட்டுக்குரியது '' என்று குறிப்பிட்டுள்ளார் .

அதிபர், ஆசிரியர்கள் தேர்தலில் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன். Reviewed by Admin on September 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.