வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்
வவுனியா அல் காமியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 18ம் திகதி மாலை 5.00 மணி தொடக்கம் காணமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கார்த்திகேசு நிருபன் (வயது 38) என்னும் ஆசிரியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதாகக் கூறி, புறப்பட்ட இவர் இன்று வரை வீடு வந்து சேரவில்லை.
இவரை இராணுவ புலனாய்வாளர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்
Reviewed by Admin
on
September 29, 2013
Rating:

No comments:
Post a Comment