அண்மைய செய்திகள்

recent
-

பாக். உயர் ஸ்தானிகர் யாழ். விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரொஷி முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.வட மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்துள்ளார். 

 இதன்போது யாழ். வணிகர் கழக தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான ஆர் ஜெய்சேகரத்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, தேர்தல், அரசியல் மற்றும் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

 இதனை தொடர்ந்து யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு உயர் ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்டார். கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக பொறுப்பாளர் தாவூத் இஹ்திசாமும் உயர் ஸ்தானிகருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.



பாக். உயர் ஸ்தானிகர் யாழ். விஜயம் Reviewed by Admin on September 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.