ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்?
வடமாகாண முதலமைச்சராக தெரிவுசெய் யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள வாய்ப்புக்கள் இருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண ஆளுநர் முன்னிலையில் புதிய முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவித்திருந்தது. அவ்வாறு அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளாத பட்சத்தில் ஜனாதிபதி முன்னிலையிலோ அல்லது கட்சித் தலைவர் முன்னிலையிலோ சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. சபையில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாளை திங்கட் கிழமை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை புதிய அமைச்சரவையை அமைப்பது தொடர்பிலும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாளை மீண்டும் கூடி ஆராயவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்?
Reviewed by Admin
on
September 29, 2013
Rating:

No comments:
Post a Comment