எதிர்வரும் ஏப்ரலில் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும்
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் அளவில் யாழ்ப்பாணத்துக்கு விஸ்தரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று ரயில் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
பெரும்பாலும் எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயில் செல்லும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்தேவி ரயில் 1990ம் ஆண்டு போர் காரணமாக வவுனியாவுக்கு அப்பால் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஏப்ரலில் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும்
Reviewed by Admin
on
September 15, 2013
Rating:
No comments:
Post a Comment