மன்னார் மாவட்ட வாக்காளர்கட்கு சில யோசனைகள்
வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாவும்.அட்டைகள் கிடைக்காதோர் தபாலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனவும்.வாக்காளர் அட்டை கிடைக்காதோர் உரிய அடையாள அட்டையுடன் தான் வாக்களிக்க வேண்டிய வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
1.காலையில் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லுங்கள்
2.வாக்காளர் அட்டை இருப்பின் கொண்டு செல்லுங்கள்
3.அடையாள அட்டை வாக்களிக்க ஒரு முக்கிய ஆவணமாகும் அதனைக் கட்டாயம் கொண்டு செல்லவும்.
4.வாக்களிப்பு நிலையங்களுக்குள் சிறுவர்களை அழைத்துச்செல்ல வேண்டாம்.
5.சரியாக உங்கள் வாக்களிப்பு நிலையத்தை இனங்கண்டு அங்கே செல்லவும்
6.வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தருடன் கௌரவமாக நடந்து கொள்ளவும்
7.வாக்களிப்பு மன்ற முகவர்களுடன் தேவையற்ற வாதங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்
8.முதலில் உரிய அரசியல் கட்சியின் சின்னத்திற்கு வாக்களியுங்கள் அதனை அடுத்து அக்கட்சியில் நீங்கள் விரும்பிய மூவருக்கு வாக்களிக்கவும்.
9.உங்களுக்கு 3 மூன்று விருப்பு வாக்கு அளிக்கும் உரிமையுள்ளது.ஆனால் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு மட்டும் மூன்று வாக்கையும் அளித்துவிடாதீர்கள்.இதனால் பயனில்லை;..
10.அதிகப்படியான மூன்று விருப்பு வாக்குகளையும் உங்கள் விருப்பக் கட்சியைச் சேர்ந்த மூவருக்கு சரியாக விருப்பு வாக்குகளை அளிப்பீர்களாயின் நீங்கள் விரும்பிய மூவரும் தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
கே.சி.எம்.அஸ்ஹர்
மன்னார் மாவட்ட வாக்காளர்கட்கு சில யோசனைகள்
Reviewed by Admin
on
September 20, 2013
Rating:
No comments:
Post a Comment