சிறுபான்மையின மக்களின் ஆலயங்களை தெற்கில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் உடைத்து வருகின்ற நிலையில் வடக்கில் புதிய பௌத்த சிலைகளை அரசு ஸ்தாபித்து வருகின்றது-செல்வம் MP
தம்புள்ளையில் உள்ள காளிகோயில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்தும் சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கும் ஒரு செயற்பாடகவே அமைந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
அதன் ஒரு அங்கமாகவே தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் அமைந்துள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பேரினவாத அமைப்புக்கள் இனவாதத்தை தூண்டுகின்ற வகையில் ஆலயங்கள் மீதும்,முஸ்ஸிம் மக்களின் வழிபாட்டுஸ்தளமான பள்ளிவாசல் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது.
தொடர்ந்தும் மத வணக்கஸ்தளங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்ற போதும் அரசு இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
தொடர்ந்தும் சிறு பாண்மையின மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது.சிறு பாண்மையின மக்களின் ஆலயங்களை தெற்கில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் உடைத்து வருகின்ற நிலையில் வடக்கில் புதிய பௌத்த சிலைகளை அரசு ஸ்தாபித்து வருகின்றது.
இது மட்டுமின்றி சிங்கள குடியேற்றங்களையும் வடக்கில் ஆரம்பித்துள்ள அரசு தொடர்ந்தும் தமிழ்,முஸ்ஸிம் மக்களை அடிமைகலாக்கி வருகின்றது.
-எனவே தம்புள்ளையில் உள்ள காளிகோயில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது வண்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றது.
ஆலயங்கள்,பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழ் தேசியக்யுகூட்டமைப்பு வெகு விரையில் மாபெரும் சாத்வீக போராட்டத்தை முன்னெடுக்கும்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர்
(6-09-2013)
சிறுபான்மையின மக்களின் ஆலயங்களை தெற்கில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் உடைத்து வருகின்ற நிலையில் வடக்கில் புதிய பௌத்த சிலைகளை அரசு ஸ்தாபித்து வருகின்றது-செல்வம் MP
Reviewed by NEWMANNAR
on
September 07, 2013
Rating:
No comments:
Post a Comment