மன்னார் மாவட்ட இந்து மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும்.
மன்னார் மாவட்ட இந்து மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதி நிதிகள் சுமர் 123 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட இந்து மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர்)
(5-09-2013)
மன்னார் மாவட்ட இந்து மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும்.
Reviewed by NEWMANNAR
on
September 05, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 05, 2013
Rating:

No comments:
Post a Comment