யாழில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்புக்கு தயாராகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்புக்கான
செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள் .
இம்முறையும் கமத் தொழில் தினைக்களத்தினால் வழமைபோன்ற மானிய உரம் விநியோகம் இடம் பெறுகின்றபோதிலும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள் .
நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு பரப்புக்காணிக்கு ஏக்கர் வரியாக ஒரு ரூபா ஐம்பது சதம் செலுத்துவதுடன் அவர்கள் மானியமாக பெறும் ஒரு கிலோ உரத்திற்கு மூன்றுரூபா காப்புறுதிக்கட்டணமாகவும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு பணம் அறிவிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள் .
இது சம்பந்தமாக யாழ் மாவட்ட கமத் தொழில் தினைக்களத்தின் பெரும்போக உத்தியோகத்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இது வழமையான செயல்பாடு எனவும் எதிர் காலத்தில் இயற்கையினால் ஏற்பட்க்கூடிய அழிவுகளை விவசாயிகள் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் இதனை ஈடுசெய்யும் வகையில் காப்புறுதிப் பணங்கள் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .
யாழில் மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்புக்கு தயாராகின்றனர்.
Reviewed by Admin
on
October 11, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment