வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் பலி
வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். வவுனியாவில், இன்று மாலை பெய்த கடும் மழை பெய்தததுடன் இடி, மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது.
வவுனியா, தாண்டிக்குளம், அரச பண்ணையில் தொழில்புரிந்த பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
மெனிக்பாம், செட்டிக்குளத்தை வதிவிடமாக கொண்ட மகேந்திரன் பராசக்தி என்ற 40 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளார்.
கடுமழை பெய்துக்கொண்டிருந்த போது குறித்த பெண் மண்வெட்டியை கையில் வைத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் பலி
Reviewed by Admin
on
October 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment