அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சபைக்கு மூன்று உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்- படங்கள்

நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் மூவர் இன்று(16) வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஈபிஆர்.எல்.எப்பைச் சோந்தவர்களான க.சர்வேஸ்வரன், ம.தியாகராஜா, க.சிவமோகன் ஆகியோர் இன்று தமது பதவிப்பிரமாணத்தைச் செய்து கொண்டனர்.

வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் சட்டத்தரணி கே.தயாபரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு வவுனியா மாவட்ட உறுப்பினராகிய இந்திரராஜா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே புளொட் அமைப்பைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்திலும்இமேலும் இருவர் கொழும்பிலும், மற்றுமொருவராகிய சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலிலும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும், அக்டோபர் 25ம் தேதி தனது கன்னி அமர்வை நடத்தவுள்ள வடமாகாணசபையின் முதலாவது நடவடிக்கையில் இருந்து, மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றும், அவர்களுக்கான வழிகாட்டலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதன் தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் செய்யும் என்று இன்றைய பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.


வட மாகாண சபைக்கு மூன்று உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்- படங்கள் Reviewed by Admin on October 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.