நாற்பது வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் முல்லைத்தீவு – துணுக்காய்ப் பிரதேச வீதிகள்.பிரதேச மக்கள் அசௌகரியம்.
முல்லைத்தீவு , துணுக்காய் , நட்டாங்கண்டல் , இரணை இலுப்பைக்குளம் ஆகிய பகுதிகளுக்கான
பிரதான வீதிகள் கடந்த 40 வருடங்களாக புனரமைக்ப்பபடாமையால் இப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் சந்தியில் இருந்து ஒட்டன்குளம் 30 வீட்டுச்சந்தி , பொன்னகர் , நட்டாங்கண்டல் , பனங்காமம் , மூன்று முறிப்பு ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி மற்றும் துணுக்காய் சந்தியிலிருந்து வவுனியா - மன்னார் வீதியை இணைக்கும் பூவரசன்குளம் சந்திவரைக்குமான சுமார் 28 மைல் வரையான வீதி என்பன மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது .
இதனைவிட இவ்வீதியிலுள்ள பறங்கியாற்றுக்கான பாலம் மற்றும் பாலியாற்றுக்கான பாலம் தவிர ஏனைய சிறிய பாலங்களும் பெரிய பாலங்களும் சேதடைந்து காணப்படுகின்றன .
குறிப்பாக துணுக்காய் சந்தியில் இருந்து பொன்னகர் , விநாயகபுரம் வரைக்குமான பகுதியினை தினமும் 375 வரையான குடும்பங்கள் பயன்படுத்துகின்றன .
இதேபோன்று ஏனைய பகுதி மக்களும் இவ்வீதியைப் பயன்படுத்துகின்றனர் .
எனவே நாற்பது வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்ற இந்த 28 மைல் நீளமான வீதியினைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்களும் இவ் வீதியால் பயணிப்போரும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
நாற்பது வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் முல்லைத்தீவு – துணுக்காய்ப் பிரதேச வீதிகள்.பிரதேச மக்கள் அசௌகரியம்.
Reviewed by Admin
on
October 16, 2013
Rating:

No comments:
Post a Comment