அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனவர்களை கணக்கெடுக்க முடிவு

யுத்தகாலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காணாமல் போனவர்கள் மற்றும் ஆட்களுக்கும் சொத்துகளுக்கும் உண்டான சேதங்கள் தொடர்பாக ஒரு விசேட கணக்கெடுப்பை அரசாங்கம் நடத்தவுள்ளது.

 இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும் என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைங்களின் படி நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை நடத்தவுள்ளது.

 இந்த விசேட கணக்கெடுப்பு 1983 இலிருந்து மே 2009 இல் யுத்தம் முடியும்வரையுள்ள காலத்தை அடக்கியதாக இருக்கும். இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 தொடக்கம் டிசெம்பர் 10 வரை நடைபெறும். வீட்டுக்கு வரும் கிராம அதிகாரிக்கு துல்லியமான தகவலை வழங்குவதன் மூலம் பொதுமக்கள் இக் கணக்கெடுப்புக்கு உதவ வேண்டுமெனவும் அவர் கூறினார்.

காணாமல் போனவர்களை கணக்கெடுக்க முடிவு Reviewed by Admin on October 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.