அண்மைய செய்திகள்

recent
-

பட்டினியில் இலங்கை 43வது இடம்: தொடர்ந்தும் ஆபத்தான நிலையில்!

2013 பட்டினி சுட்டியில் இலங்கை 43 வது இடத்திலுள்ளதுடன், தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா 2012ம் ஆண்டு உலக பட்டினிச் சுட்டியில் 67ம் இடத்திலிருந்து 2013ம் ஆண்டு 63ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 எனினும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 40 வீதமானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை. சீன, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கீழேயே இந்தியா உள்ளது. உலக பட்டினி சுட்டியில் சீனா, பட்டினி மட்டத்தில் 6 ம் இடத்தில் உள்ளது.

 இலங்கை 43 ஆவது, பாகிஸ்தான் 57வது, பங்களாதேஷ் 58 வது இடங்களை பெற்று கடுமையான பட்டினி மட்டத்திலிருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இந்த சுட்டி 120 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டினி மட்டத்தை காட்டுகின்றது.

 இந்த சுட்டியை தயாரிக்கும் போது மந்த போஷனை உடையோரின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் நிறை குறைந்த பிள்ளைகளின் விகிதாசாரம், ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரண வீதம் ஆகிய மூன்றும் சம அளவில் கருத்தில் எடுக்கப்பட்டன. இதுவரை வெளியிடப்பட்ட பட்டினிச் சுட்டி அறிக்கையின்படி, 19 நாடுகள் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டினியில் இலங்கை 43வது இடம்: தொடர்ந்தும் ஆபத்தான நிலையில்! Reviewed by Admin on October 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.