மன்னார் நகரசபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் .- படங்கள்
2013 ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளையொட்டி நேற்று திங்கட்கிழமை மன்னார்
நகரசபை நிர்வாக எல்லைக்குட்பட்ட மூர்வீதி கிராமத்தில் மூர்வீதி வரியிருப்பாளருக்கு நன்மை பயக்கத்தக்கதான நடமாடும் சேவை ஒன்றினை மன்னார் நகரசபை ஏற்பாடு செய்தது .
மன்னார் நகரசபையின் செயலாளர் எல் . றெனால்ட் பிறிற்றோ அவர்களது திட்டமிடல் மற்றும் வழிகாட்டலின் கீழ் சபை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடமாடும் சேவையின் நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை காலை மன்னார் மூர்வீதி கிராமத்தில் இடம் பெற்றது .
குறித்த நிகழ்வின் ஆரம்ப வைபவத்திற்கு மன்னார் நகர சபை தலைவர் எஸ் ஞானப்பிரகாசம் அவர்களும்இமன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ. ஜே துரம் அவர்களும் ; . . கலந்து சிறப்பித்தனர் .
காலை 9.00 மணிமுதல் மாலை 3 மணி வரை நடை பெற்ற குறித்த நடமாடும் சேவையில் குறித்த பகுதி வரியிருப்பாளர்களுக்கு சோலைவரி , துவிச்சக்கர வண்டி உரிமம் , வியாபார உரிமம் , பொது முறைப்பாடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன .
சுமார் 150 பொதுமக்கள் வரை கலந்து கொண்டு பயனடைந்த இந் நடமாடும் சேவையின் போது பொதுமக்களது பல்வேறு பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டதுடன் சபைக்குரிய நிலுவைகள் ரூ .47.560.00 உம் குறித்த சந்தர்ப்பத்தில் அறவிடப்பட்டது .
உள்ளுராட்சி வார நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை தொடக்கம் 21.10.2013 ம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27.10.2013 ம் திகதி வரை தேசிய ரீதியில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
மன்னார் நகரசபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் .- படங்கள்
Reviewed by Admin
on
October 22, 2013
Rating:

No comments:
Post a Comment