அரச சுகாதாரத்துறை ஊழியர்கள் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.இலங்கை சுவசேவை சங்கம் அறிவிப்பு.
அரசாங்க சுகாதாரத் துறை ஊழியர்களுக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவை வழங்காததை
எதிர்த்து நாளை புதன்கிழமை நாடுபூராவிலுமுள்ள பிரதான அரச வைத்தியசாலைகள் முன்பாக மதிய உணவு நேரத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அகில இலங்கை சுவசேவை சங்கம் தெரிவித்துள்ளது .
அத்தோடு கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்திலிருந்து சுகாதார அமைச்சுவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாகவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக அகில இலங்கை சுவசேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ . காமினி குமாரசிங்க தகவல் தருகையில் ,
2006.01.01 ஆம் திகதி தொடக்கம் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான சம்பள சுற்றறிக்கைக்கு அமையவே சம்பள நிலுவை கொடுப்பனவை வழங்க வேண்டும் .
அதனடிப்படையில் 2012 ஆம் ஆண்டு வரை 6 வருட காலப்பகுதிக்கு சம்பள நிலுவை வழங்கப்பட வேண்டும் .
ஆனால் இதுவரையில் இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை .
அத்தோடு நிலுவை சம்பளத்தை வழங்காது புதிய சம்பள தரத்திற்கு ஏற்ப சம்பளத்தை வழங்காது இருப்பது சுகாதார அமைச்சின் அநீதியான செயலாகும் .
எனவே இதனை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினோம் . ஆனால் தீர்வு கிடைக்கவில்லை .
இதனை எதிர்த்தே நாளை போராட்டங்களை நடத்துவதாகவும் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார் .
அரச சுகாதாரத்துறை ஊழியர்கள் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.இலங்கை சுவசேவை சங்கம் அறிவிப்பு.
Reviewed by Admin
on
October 22, 2013
Rating:

No comments:
Post a Comment