யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று திங்கட்கிழமை மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் சாதகமான பதிலினை எடுத்துத் தருவதாக உறுதியளித்ததினைத் தொடர்ந்து மேற்படி உண்ணாவிரதப் பேராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்விசார ஊழியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக, எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பரிசீலனை செய்வதுடன், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு சிபார்சு கடிதம் அனுப்பி வைப்பதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரினால் உறுதிப்படுத்தப்பட்டதினைத் தொடர்ந்து மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை (21) காலை முதல் முன்னெடுத்து வந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாளாந்த கூலியின் (அமைய) அடிப்படையில் பணியாற்றி வந்தவர்களை வெற்றிடங்களுக்கான புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பில் சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
Reviewed by Admin
on
October 22, 2013
Rating:

No comments:
Post a Comment