யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட நடவடிக்கை
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்தின் தலைவர் நல்லையா நற்குணராஜா இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
'கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதியர்களினால் 5 அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு மற்றும் சுகயீன விடுப்பு போராட்டங்கள் மூலம் தாதியருக்கான மேலதிக கொடுப்பனவுகள் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டபோதும், அதற்கான சுற்றுநிரூபம் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதனால் மேலதிக கொடுப்பனவு சுற்றுநிரூபத்தினை வெளியிடுமாறும், போக்குவரத்து, தொலைபேசி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்த கோரியும் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய வைத்தியப்பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 1 ஆம் திகதி ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட நடவடிக்கை
Reviewed by Admin
on
October 21, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment