உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு இன்று மாலை மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
பள்ளிக் குழந்தைகள் கொடுத்த பழரசத்தை குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
தியாகுவின் உண்ணாவிரதம் குறித்து திமுக தலைவர் கலைஞர், டி.ஆர்.பாலு மூலம் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.
அதற்கு பதில் கடிதம் அனுப்பிய பிரதமர், இந்த பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் தமிழக மக்களுடைய உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் தலையிட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மன்மோகன் சிங், கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தை கைவிட்டார் தியாகு
Reviewed by Admin
on
October 15, 2013
Rating:

No comments:
Post a Comment