இன்று சர்வதேச வன்முறையற்ற தினம்
வன்முறைகளை ஒழித்து அமைதியை நிலை நாட்ட அரும் பாடுபட்ட மகாத்மா காந்தி  கௌரவிக்கும் முகமாக அவரது பிறந்த பிறந்த நாளான இன்று  சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்  2007 ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியை அனைத்துலக வன்முறையற்ற நாளாக ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.    தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று சர்வதேச வன்முறையற்ற தினம்
 
        Reviewed by Admin
        on 
        
October 02, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
October 02, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment