முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி படகு ஏஞ்சின் பறிமுதல், தண்டப்பணமும் விதிப்பு
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பதிவு இல்லாமல் அனுமதிப்பத்திரம் இல்லாமல் டைனமைற் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்களுக்கு
தலா 15.000/- வீதம் மொத்தம் 30000=/ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகு எஞ்சின்களை அரசுடைமையாக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்
கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி வள்ளங்கள் வலைகள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.வலைகளை அழித்து விடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி படகு ஏஞ்சின் பறிமுதல், தண்டப்பணமும் விதிப்பு
Reviewed by Admin
on
October 25, 2013
Rating:

No comments:
Post a Comment