அண்மைய செய்திகள்

recent
-

வன்னிப் பிரதேச தொண்டர் ஆசி­ரியர்­க­ளுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்க ஏற்­பாடு.

வன்னி தொண்டராசிரியர்களுக்கான ஊதியத்தை அதிகரித்து 10 ஆயிரம் ரூபாவாக மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . வன்னியில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய சுமார் 450 பேருக்கு கடந்த ஜூலை மாதம் முதல் உதவி ஆசிரியர்களாக நியமனங்கள் வழங்கப்பட்டன .

 நியமனக்கடிதத்தில் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் பலரின் வேண்டுகோளுக்கிணங்க 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வந்தது . இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான கொடுப்பனவு நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டவாறு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .

 இதனால் இந்த ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலையினை சுட்டிக்காட்டியதையடுத்து இவர்களுக்கான கொடுப்பனவை மீண்டும் 10 ஆயிரம் ரூபாவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . 

மேலும் மாகாண சபை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த அமர்வுகளில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
வன்னிப் பிரதேச தொண்டர் ஆசி­ரியர்­க­ளுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்க ஏற்­பாடு. Reviewed by Admin on October 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.