விசேட செய்தி - வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மாரடைப்பு.அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி. -2ம் இணைப்பு
வடமாகாண முதலமைச்சர் கௌரவ சீ. வி விக்னேஸ்வரன் ஐயா
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் உபாதை காரணமாக மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற முதலமைச்சரை விசேட வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையேற்பட்டதால் வைத்தியர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளனர்.
இதேவேளை முதலமைச்சரை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றவர்களுடன் அவர் சரளமாக உரையாடியதுடன் தனக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண உபாதை எனவும் மாதாந்தம் மேற்கொண்டு வருகின்ற பரிசோதனைகளுக்காக தான் வைத்தியசாலைக்கு வந்தபோது தன்னை வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக குறித்த சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்கள் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தனக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
விசேட செய்தி - வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மாரடைப்பு.அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி. -2ம் இணைப்பு
Reviewed by Admin
on
October 30, 2013
Rating:
No comments:
Post a Comment